சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொது மக்கள் புறக்கணிப்பு

ஏரிக்குப்பம் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-22 18:47 GMT
ஆரணி


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர் கிளியம்மா கலாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் போளூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள 660 வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் அதற்காக முழு தொகையும் செலவு செய்ததாக ஊராட்சி நிதியில் இருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
ஆனால் பணி முழுமை பெறவில்லை. 

இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்டத்தை ரத்து செய்து விட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பானது.

மேலும் செய்திகள்