ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 18:47 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.என்.நேரு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் வி.பிரேம்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையாக உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல உரிய ஆணையை வழங்க வேண்டும்,

வயைறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் வழங்குதல், 

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

பொருளாளர் கிருஷ்ணன், இணைச் செயலாளர் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்