மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஆலங்காயத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2022-03-22 18:47 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு திருப்பத்தூர் மாவட்ட வளமைய உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் பேரூராட்சி துணை தலைவர் ஸ்ரீதர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் வரவேற்றுபேசினார். 

ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய அலுவலர்கள், ஆசிரிய மேற்பார்வையாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்