வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-22 18:46 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது 27). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். 

இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் ஜோதிலிங்கம் நேற்று காலை தனது வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்