விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்வது குறித்து மாணவிகள் விளக்கம்
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்வது குறித்து மாணவிகள் விளக்கம் அளித்தனர்.;
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சிக்காக கீரமங்கலம் பகுதியில் தங்கியிருந்து விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று நவீன வேளாண்மை குறித்து பயிற்சி அளிப்பதுடன் உள்ளூர் வேளாண்மை பற்றியும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சேந்தன்குடியில் விவசாயம் செய்யும் நிலத்தில் சத்துகள் உள்ளதா என்பதை அறிய மண் பரிசோதனை செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி கொடுத்தனர்.