வீடு புகுந்து திருடியவர் கைது

வீடு புகுந்து திருடியவர் கைது

Update: 2022-03-22 18:45 GMT
திருச்சி மறைமலர் அடிகளார் தெருவை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 33). இவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவை பூட்டாமல் தாழ்பாள் போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் திருச்சி சின்ன மிளகுபாறை புது தெருவை சேர்ந்த ஜாபர்அலி (33) என்பவர் அவரது வீட்டுக்குள் புகுந்து லேப்டாப் மற்றும் வெள்ளிக்கொலுசுவை திருடி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர் அலியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்