குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-22 18:28 GMT
தக்கலை, 
தக்கலை அருகே உள்ள கீழ் கல்குறிச்சி, பாலகுளக்கரையை சேர்ந்தவர் மத்தியாஸ் (வயது51), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம். சம்பவத்தன்று மாலையில் வழக்கம் போல் அருகிலுள்ள குளத்தில் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.  இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மத்தியாசை பல இடங்களில் தேடினர்.
இந்தநிலையில் மறுநாள் காலையில் மத்தியாஸ் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் மீன்பிடிக்க வலை வீசிய போது பாசியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்