ஆம்பூரில் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்

ஆம்பூரில் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-03-22 17:21 GMT
ஆம்பூர், மார்ச்.23-
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட நிலுவை பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நகராட்சி கட்டிடத்தில் வாடகை செலுத்தாதவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் வரி மற்றும் வாடகை பாக்கியை செலுத்தாமல் உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு நேற்று முன்தினம் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்