மீனம்பூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மீனம்பூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
செஞ்சி,
செஞ்சி ஒன்றியம் மீனம்பூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமார் தீர்மானத்தை வாசித்தார். கூட்டத்தில், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என்று மீனம்பூர் அறிவிக்கப்பட்டது. மேலும் உலக தண்ணீர் தினம் குறித்தும், நீர் வளத்தை காப்பதும், அதனை பெருக்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் வீரமணி, வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.