திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-03-22 17:18 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி சங்கீதா(வயது 25). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தன்விகா(2) என்ற பெண் குழந்தை உள்ளது. வினோத்குமார் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
திருமணத்தின் போது சங்கீதாவுக்கு அவரது பெற்றோர் 11 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் என ரூ.10 லட்சம் செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் வினோத்குமாரும், அவரது குடும்பத்தினரும் சங்கீதாவிடம் மீண்டும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சங்கீதாவின் தந்தை வடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் சங்கீதாவின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து திருக்கோவிலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்