1 லட்சம் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு
1 லட்சம் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மற்றும் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான ஆண், பெண் குழந்தை வளர்ச்சி கண்காணித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
இதேபோல் 1,821 குழந்தைகள் மையம், 65 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 வட்டார மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம்களில் 6 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 731 குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட உள்ளது. வருகிற 27-ந் தேதி வரை நடைபெற உள்ள முகாம்களில் குழந்தைகளின் உயரம், எடை கண்டறியப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.