நவி மும்பை மாநகராட்சி ஊழியர்கள் 191 பேர் சம்பளம் பிடித்தம்

நவி மும்பை மாநகராட்சியின் 191 ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2022-03-22 17:10 GMT
கோப்பு படம்
மும்பை, 
நவிமும்பை மாநகராட்சியில் ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் ஊழியர்கள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பணிக்கு தாமதமாக வந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பணிக்கு தாமதமாக வந்த அதிகாரிகள் உள்பட 191 மாநகராட்சி பணியாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் 1 முதல் 3 நாள் சம்பளம் வரை பிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தாமதமாக வந்த 3 ஊழியர்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நவிமும்பை மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறுகையில், "மாநகராட்சி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் தான் வேலைக்கு வருகின்றனர். அவர்கள் ஒழுக்கத்தையும், நேரத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்