வேப்பனப்பள்ளியில் கனமழையால் வெற்றிலை கொடிகள் சேதம்

வேப்பனப்பள்ளியில் கனமழையால் வெற்றிலை கொடிகள் சேதமடைந்தன.

Update: 2022-03-22 17:02 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல்நத்தம் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிகள் சரிந்து சேதமடைந்தன. இதேபோல் தக்காளி, பீர்க்கன் ஆகிய பயிர்களும் மழைக்கு நாசமாகின. இதனால் விவச்சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்