தேன்கனிக்கோட்டை அருகே பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழா

தேன்கனிக்கோட்டை அருகே பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-03-22 17:01 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே நெல்குந்தி கிராமத்தில் மேலகிரி மலை அடிவாரத்தில் வடபழனி பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடந்தன. பால்குட ஊர்வலமும் நடைபெற்றது.  தொடர்ந்து திம்மனூர் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள், காவடி, பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் சிலர் அலகு குத்தி வாகனத்தில் தொங்கியபடியும், வாகனத்தை இழுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்