ஒகேனக்கல்லில் சாலையில் நடந்து சென்ற காட்டுயானை வாகனங்களை மறித்ததால் பரபரப்பு
ஒகேனக்கல்லில் சாலையில் நடந்து சென்ற காட்டுயானை வாகனங்களை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
பென்னாகரம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து உணவு, தண்ணீர் தேடி 20-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்துள்ளன. இந்த யானைகள் தற்போது ராசிகுட்டை, சின்னாறு வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் தினமும் ஒகேனக்கல் அருகே முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் காலை, மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒரு யானை நேற்று முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் சென்றது. அப்ேபாது அந்த வழியாக வந்த பஸ் மற்றும் கார்களை யானை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் திருப்பி சென்றனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகனங்கள் சென்றன. சாலையில் சென்ற காட்டுயானை வாகனங்களை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.