சூளகிரி அருகே மொபட்டுகள் மோதல்; வாலிபர் பலி
சூளகிரி அருகே மொபட்டுகள் மோதியதில் வாலிபர் பலியானார்.
சூளகிரி:
சேலம் மாவட்டம் தொட்டம்பட்டியை சேர்ந்தவர் அணில்குமார் (வயது 23). இவர் பெங்களூரு காருபாளையா லட்சுமி லே அவுட் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவரும் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சரண்குமார் (23) என்பவரும் மொபட்டில் சூளகிரி அருகே அட்டகுறுக்கி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மொபட், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் அணில்குமாரும், சரண்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். அணில்குமார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். சரண்குமார் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.