சின்னமுத்தூரில் திருவிளக்கு பூஜை

சின்னமுத்தூரில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-03-22 17:00 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்தூர் வார வழிபாட்டு மன்றம் சார்பில், திருவிளக்கு பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிந்தலக்கரை வெட்காளியம்மன் தவசித்தர் பீடத்திலிருந்து அம்மன் சிலை கொண்டு வரப்பட்டு, கே.ஆர்.பி. அணை கூட்ரோட்டில் இருந்து சின்னமுத்தூர் வார வழிபாட்டு மன்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து திருவிளக்கு பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்