தோட்ட காவலாளி மர்ம சாவு

போடி அருகே தோட்ட காவலாளி மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.;

Update: 2022-03-22 16:49 GMT
போடி:
போடி அருகே பெரியாற்று கோம்பை செல்லும் வழியில் உள்ள அருங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதுச்சேரி பெரியபேட்டையை சேர்ந்த நாவப்பன் (வயது 59) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று காலை அந்த தோட்டத்தில் நாவப்பன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதனை பார்த்த தோட்டத்தின் மேற்பார்வையாளர் அப்பாஸ் மந்திரி, குரங்கணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாவப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாவப்பன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்