த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 16:43 GMT
வெளிப்பாளையம்:
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து, நாகையில் த.மு.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க நகர தலைவர் முகமது அஸ்கின் தலைமை தாங்கினார்.மாநில விவசாய அணி பொருளாளர் இப்ராகிம், மாவட்ட தலைவர் ஜபருல்லா, செயலாளர் நிஜாமுதீன், துணைச்செயலாளர் ரபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் ஷனாவுல்லாஹ் பேசினார். இதில் த.மு.மு.க.வினர் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்