பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்;
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட இணை செயலாளர் காந்தி, மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.