வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-22 16:27 GMT
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனஞ்ஜெயன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பூபதி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை உள்ள அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு தாமதமின்றி வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பதவி உயர்வுக்கான தகுதி காலத்தை 4 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்