பொள்ளாச்சியில் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 16:26 GMT
பொள்ளாச்சி

துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி பெறாத நிலையிலும் கொரோனா தொற்று காரணமாக நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். 
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிதாக கிராமம், உள்வட்டம், கோட்டம் மற்றும் மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. 
இதில் பொருளாளர் சுரேஷ், இணை செயலாளர் அபிப் ரகுமான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்