கோத்தகிரி பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் கலாசாரம் குறித்து விழிப்புணர்வு

கோத்தகிரி பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் கலாசாரம் குறித்து விழிப்புணர்வு நடந்தது.;

Update: 2022-03-22 16:09 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள ஆதிவாசி நலசங்க பழங்குடியின பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு வாழ்வியல் கலாசாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுடன் கலந்தாய்வு, பயில்விப்பு பயிற்சி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

 தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக சமூகவியல், சமூகப்பணி துறைத்தலைவர் தமிழரசன், கவுரவ விரிவுரை யாளர் ஜோசப்பன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் விஜயகுமார், பள்ளி முதல்வர் பூவிழி, மாவட்ட ஆதிவாசிகள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினா். 

இது குறித்து பேராசிரியர் தமிழரசன் கூறும்போது, குஞ்சப்பனை கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவர்களுடன் கலந்துரை யாடல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பனகுடி, புதுகோத்தகிரி, குறும்பர், கோத்தர் இன மக்களுடன் வாழ்விட கலந்தாய்வு ஆகியவை நடைபெற உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்