குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-03-22 16:08 GMT
குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரெயில் பாதை அருகே வனப்பகுதி உள்ளது. இதனால் இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 

மேலும் யானைகள் சாலை மற்றும் ரெயில் பாதையில் அடிக்கடி முகாமிட்டு அட்டகாசத்திலும் ஈடுபட்டு வருகின்றன. தற்போது வனப்பகுதியில் காட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு உள்ளன. 

இதனால் யானைகள் பாதை மாறி குடியிருப்புக்குள் புகுந்துவிடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

அதிகாரிகள் ஆய்வு

எனவே யானைகள் வழித்தடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங் களை அப்புறப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து காட்டு யானைகளின் வழித்தடத்தை ரெயில்வே மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த நிலையில் வனத்துறை, ரெயில்வே, வருவாய் மற்றும் நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்தனர்.
 பின்னர் அவர்கள் காட்டுயானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

கட்டிடங்கள் அகற்றப்படும்

இந்த ஆய்வின்போது வழித்தடத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள், அவை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதா? அல்லது பட்டா நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். 

அத்துடன் அளவிடும் பணி செய்யப்பட்டது.  இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, காட்டு யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்கு பின்பு, வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்