சாதி ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

சாதி ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை;

Update: 2022-03-22 16:04 GMT
உளுந்தூர்பேட்டை

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் உளுந்தூர்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தி.மு.க. அரசின் பட்ஜெட்டில் ஆதிதிராவிட மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. ஆதி திராவிட மக்களுக்கான தனி பட்ஜெட் போட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி கேட்டுக்கொள்கிறது. ஆதிதிராவிட மக்கள் அரசியல், பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்களா? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

சமூகநீதியில் மிகுந்த அக்கறை கொண்ட தி.மு.க. அரசு உள்ளாட்சி பதவிகள் உட்பட அனைத்து பதவிகளிலும் துணைத்தலைவர் பதவிகளில் ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி தமிழக முதல்-அமைச்சர் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். மாணவர்களின் சுமை அதிகரிக்கும் என்பதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் நடத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்