காவிரி நதியை தமிழகம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது- பசவராஜ் பொம்மை குற்றம்சாட்
காவிரி நதியை தமிழகம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது என்று பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்;
பெங்களூரு:
காவிரி நதியை தமிழகம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது என்று பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேசிய பசுமை தீர்ப்பாயம்
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை நடுவர் மன்றத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்த காவிரி நிர்வாக ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மழையை ஆதாரமாக வைத்து நாங்கள் மேகதாது திட்டத்தை செயல்படுத்துகிறோம். அந்த மழை நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் கர்நாகாவிரி நதியை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் டகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. மேகதாது திட்டம் குறித்து கர்நாடக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்பட்டது. டெல்லிக்கு சென்று திட்டத்திற்கு அனுமதிகோர முடிவு செய்யப்பட்டது.
மதிப்பு கிடையாது
இந்த நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசின் தீர்மானத்திற்கு மதிப்பு கிடையாது. அது சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. அது அரசியல் உள்நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். அது போல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்தப்படி மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவோம். காவிரி நிர்வாக ஆணையத்திலும் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. காவிரி நதியை தமிழகம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது. ‘பெலகாவி பைல்ஸ்' என்ற பெயரிலும் படம் எடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 1956-ம் ஆண்டே பெலகாவி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.
அர்த்தம் இல்லை
கன்னட மொழி அதிகம் பேசப்படும் சோலாப்பூர், அக்கல் கோட்டே ஆகிய பகுதிகள் இன்றும் மராட்டிய மாநிலத்தில் தான் இருக்கின்றன. அதனால் அவரது கருத்தில் அர்த்தம் இல்லை. பெலகாவி பிரச்சினை எழுப்பி தங்களின் சொந்த பிரச்சினைகளை திசை திருப்ப சிவசேனா முயற்சி செய்கிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.