உள்ளாட்சி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 15:39 GMT
காரைக்கால், மார்ச்.22-
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை விரைவில் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து நேற்று  முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
காரைக்கால் உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன் தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணை தலைவர் சந்தனசாமி, இணை பொதுச்செயலாளர் ஜோதிபாசு, அலுவலக செயலாளர் புகழேந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்