தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்

Update: 2022-03-22 15:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் மாடன் குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் வாலிபர் ஒருவர் மூழ்கி பிணமாக கிடப்பதாக சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த கோவில்ராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்