சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வட மாநில வாலிபர் கைது
தூத்துக்குடியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத் கேத்ரபால் (வயது 22). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஹரிபிரசாத் கேத்ரபால், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிபிரசாத் கேத்ரபாலை கைது செய்தார்.