சுல்தான்பேட்டையில் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
சுல்தான்பேட்டையில் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆசிரியர் செல்வக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் மரகதம் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், கட்டமைப்பு, முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சமூக ஆர்வலர்கள் செஞ்சேரி எம்.கே.முத்துமாணிக்கம், சாவித்திரி கனகராஜ் ஆகியோர் பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கி பேசினர். எஸ்.எம்.சி. தலைவர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் 6மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கல்வியாளர் சிவசக்தி நன்றி கூறினார்.