கார் மோதி காவலாளி பலி
வாலாஜாபாத் சாலையை கடக்கும் போது கார் மோதி காவலாளி பலியானார்.
காவலாளி
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்க்காடு ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் ஜங்ஷன் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்காக பஸ்சில் சென்று குன்னவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வண்டலூர்- வாலாஜாபாத் சாலையை கடக்கும் போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் செந்தில் மீது மோதியது.
சாவு
இதில் படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தினர். செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.