தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருட்டு

சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை, ரூ 60 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2022-03-22 13:08 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கூலி தொழிலாளி
சாத்தான்குளம் அருகே உள்ள இளமாங்குளத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பிச்சையா (வயது 55). விவசாயி கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள்  சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். 
இளமாங்குளம் வீட்டில் பிச்சையாவும், அவரது மனைவியும் குடியிருந்து வருகின்றனர். தினமும் காலையில் இருவரும் கூலி வேலைக்கு சென்று விடுவார்கள். மதியம் வேலை முடிந்து வீடு திரும்புவது வழக்கம்.
நகை, பணம் திருட்டு
இதேபோன்று, கடந்த 16-ந் தேதி காலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர். 
இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு மின்சார கணக்கீ்டு செய்வதாக 2 மர்ம நபர்கள் வந்ததாக கூறப்படுகிறது. மாலையில் இவர்கள் வீட்டுக்கு வந்தபோது, வீட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. 
திடுக்கிட்டுபோன இவர்கள் உள்ளே சென்றபோது பூஜை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகளும், ரூ.60 ஆயிரமும் திருட்டு போனது தெரிய வந்தது.
மர்மநபர்களுக்கு  வலைவீச்சு
 இதுகுறித்து பிச்சையா கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு 2 மர்ம நபர்களை தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்