மந்திரி நவாப் மாலிக்கிற்கு ஜெயிலில் சலுகை- மெத்தை, நாற்காலி பயன்படுத்த கோர்ட்டு அனுமதி
ஜெயிலில் மெத்தை, நாற்காலியை பயன்படுத்த மந்திரி நவாப் மாலிக்கிற்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
மும்பை,
ஜெயிலில் மெத்தை, நாற்காலியை பயன்படுத்த மந்திரி நவாப் மாலிக்கிற்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
காவல் நீட்டிப்பு
மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக் (வயது 62) கடந்த மாதம் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் சொத்துக்களை வாங்கி அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மந்திரி நவாப் மாலிக் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவரது காவல் முடிந்ததை அடுத்து பி.எம்.எல்.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மெத்தை, நாற்காலிக்கு அனுமதி
இந்தநிலையில் நவாப் மாலிக்கின் வயது, உடல்நலத்தை சுட்டிக்காட்டி ஜெயிலில் மெத்தை, நாற்காலி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அவரது வக்கீல் கோர்ட்டில் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நவாப் மாலிக் ஜெயிலில் மெத்தை, போர்வை, நாற்காலி போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
----