கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா

கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா

Update: 2022-03-22 11:23 GMT
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
ெகாண்டத்து காளியம்மள் கோவில்
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில்  உள்ளது. இந்த கோவிலில் கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு ேதாறும் சிறப்பாக நடைபெறும்.  அதன்படி இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 11ந் தேதி தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 16ந் தேதி  கிராமசாந்தியும், அதை தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.
கடந்த  20ந் தேதி வசந்தம் பொங்கல் வைத்தல் விழா நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் குண்டம் திறந்து பூ போடுதலும், பக்தர்கள் குண்டத்துக்கு கரும்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து குண்டம்‌ பற்ற வைத்தல் நிகழ்வும் நடைபெற்றது. 
குண்டம் இறங்குதல்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் பூ மிதித்தல் நேற்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு படைக்கலம் எடுத்து வரப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்.இதன் காரணமாக இந்தாண்டு பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து குண்டம் இறங்கினர். வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு 500க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுடிருந்தனர்.

மேலும் செய்திகள்