செங்கோட்டை: விவசாயிகள் பயிற்சி முகாம்

விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது

Update: 2022-03-21 22:59 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் மண்வள அட்டை விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை-பொறுப்பு) ஆதிநாதன் தலைமை தாங்கினார். புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் வரவேற்றார்.
முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள், வேளாண்மைத்துறைக்கான தென்காசி மாவட்ட ஆலோசகர் வேங்கட சுப்ரமணியன், தென்காசி அக்மார்க் ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் அய்யப்பன், மண் ஆய்வுப்படி உரமிட்டு வெற்றி அடைந்த புளியரை விவசாயி மாரியப்பன் ஆகியோர் தொழில்நுட்பம் குறித்து பேசினர். முகாமில் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட புதூர் கிராமத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்