வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட மையம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் வள்ளிதேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி, இணை செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையாக உள்ள நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்களை உடனே ஏற்படுத்த வேண்டும், மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்க வேண்டும், துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.