தென்காசி: வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-21 22:42 GMT
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கிளை நிர்வாகி ராஜாமணி தலைமை தாங்கினார். ஞானசேகரன் முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட இணை செயலாளர் மாடசாமி, ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், நிர்வாகி பீமாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்