விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு

விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி இறந்தார்.;

Update: 2022-03-21 22:40 GMT
சேலம்:
சேலம் அருகே வீராணம் அடுத்த சுக்கம்பட்டி எலிசபெத் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் மஞ்சுளா (வயது 16). சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி மஞ்சுளா, அருகில் வசித்து வரும் ஒருவரின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை பார்த்த மாணவியின் தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுளா மறுநாள் யாருக்கும் தெரியாமல் விஷத்தை குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பள்ளியில் மயங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயக்குமார், உடனடியாக பள்ளிக்கு சென்று மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்