‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-21 22:18 GMT
குவிந்து கிடக்கும் குப்பை 
கோபி அருகே உள்ள கரட்டூர் பிரிவு பகுதியில் உள்ள பாரியூர் ரோட்டில் குப்பை கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பை குவியலில் அந்த வழியாக செல்லும் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் கரும்புகை எழும்புகிறது. இதன்காரணமாக ரோட்டில் வாகனங்களில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.


ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? 
கொடுமுடி அருகே சாலைப்புதூரில் உள்ள வாய்க்கால் செட் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் வாய்க்காலில் நீரோட்டத்துக்கு தடை ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் முறையாக செல்ல தடைஏற்படுகிறது. எனவே வாய்க்காலை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சாலைப்புதூர்.

பராமரிப்பில்லாத பூங்கா 
கோபியில் வாஸ்து நகர் பகுதியில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே சிறுவர் பூங்காவில் உள்ள செடி, கொடிகளை அகற்றி முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.

பழுதடைந்த ரோடு
சென்னிமலை மலைக்கோவிலுக்கு செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மலை ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக மலை ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் விலக முடியாத நிலை உள்ளது. மேலும் மலை ரோட்டில் உள்ள கொண்ைட ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும்படி கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைகள் உடைந்து உள்ளன. எனவே மழைக்காலம் வருவதற்கு முன்பு பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைப்பதுடன், கொண்டை ஊசி வளைவுகளில் கண்ணாடி பொருத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ருத்ரமூர்த்தி, ெசன்னிமலை.

மின்விளக்கு எரியுமா?
சித்தோடு நால்ரோட்டில்  சிறிய உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இது கடந்த பல மாதங்களாக சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. உடனே மின்விளக்கு எரிய  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீ.கவுரி சங்கர், வசுவபட்டி, சித்தோடு.


பாராட்டு 
கோபி கிருஷ்ணன் வீதியில் உள்ள ரோட்டில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசவில்லை. எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது அந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ேகாபிசெட்டிபாளையம்.

மேலும் செய்திகள்