12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறையினர் தகவல்
12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு
12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழ்நாட்டில் 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதல் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளிலேயே கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்கு பின்னர் 2-ம் தவணை தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
கோர்பேவேக்ஸ்
இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு கடந்த 15-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18 ஆயிரத்து 709 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது 28 சதவீதம் ஆகும். 28 நாட்களுக்கு பிறகு மீண்டும் இவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.