சங்கரன்கோவில்: பஸ் மீது கல் வீசிய லாரி டிரைவர் கைது
பஸ் மீது கல் வீசிய லாரி டிரைவரை கைது செய்தனர்
சங்கரன்கோவில்:
நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் வழியாக தேனிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 36) என்பவர் ஓட்டினார். சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூர் பகுதியில் பஸ் வந்த போது, பஸ்சுக்காக காத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவரான ராமசுப்பு (49) என்பவர் கையை காட்டி பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமசுப்பு கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் பஸ் லேசான சேதம் அடைந்தது. இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசுப்புவை கைது செய்தனர்.