பேட்டை:மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-21 21:28 GMT
பேட்டை:
நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, அங்குள்ள ஆலமரத்தடியில் பெற்றோர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்