புகையிலை பொருட்கள் விற்ற பெண் சிக்கினார்

புகையிலை பொருட்கள் விற்ற பெண் சிக்கினார்

Update: 2022-03-21 21:21 GMT
நெல்லை:
மானூர் அருகே உள்ள காந்தீஸ்வரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி ராமலட்சுமி (வயது 35). இவர் கங்கைகொண்டான் அருகே இத்திகுளம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராமலட்சுமி தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராமலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்