நெல்லை: மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-03-21 21:13 GMT
நெல்லை:
நெல்லை மாநகர மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நெல்லை டவுன் குருநாதன் கோவில் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்றதாக நெல்லை மேல அருகன்குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 43) என்பவரை கைது செய்தனர். இதேபோல் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் மது விற்றதாக கோட்டூர் ரோட்டை சேர்ந்த சங்கர் (37) என்பவரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 18 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்