திருமங்கலம்
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்(வயது 56). மெக்கானிக். இவர் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக பரமசிவம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.