பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி கணவர் மனு

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி கணவர் மனு அளித்தார்.

Update: 2022-03-21 20:53 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, வீரகனூர் அருகே உள்ள வீ.ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அமரன் (வயது 53) என்பவர் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் கிழக்கு ராஜபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2014-ம் ஆண்டு வரை நாங்கள் ஒன்றாக வசித்து வந்தபோதும் அவர் என்னிடம் சரியாக பேசியதில்லை. அவரை என்னுடன் வாழவிடாமல் அவரது தாய், தங்கை, தங்கையின் கணவர், தம்பி, உறவினர்கள் 2 பேர் ஆகியோர் தடுத்து வருகின்றனர். மேலும் அவர் 36½ பவுன் நகை சீர் செய்ததாக பொய் கூறுகிறார். அவருக்கு வீட்டுமனை வாங்கி கொடுத்தால் நல்லமுறையில் வாழ்வதாக கூறினார். வீட்டுமனையை அவரது பெயருக்கு வாங்கி கொடுத்தும் என்னுடன் நல்லமுறையில் வாழவில்லை. அவரது உறவினர்களும் அவரை என்னுடன் வாழவிடவில்லை. உறவினர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு அவர் என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து தரவும் மறுக்கிறார். எனது சொத்துக்களை பெறுவதற்காகவே இந்த மோசடி திருமணத்தை செய்துள்ளார். இதனால் ஆசிரியர் பணியை என்னால் சரியாக செய்ய முடியாமல் மன உளைச்சலாகி உள்ளேன். எனவே அவர்கள் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அவர் இது தொடர்பான மனுவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கொடுத்துவிட்டு சென்றார்.

மேலும் செய்திகள்