தம்பதியை தாக்கிய வாலிபர் கைது

தம்பதியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-21 20:47 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியங்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் லெட்சுமி(வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). சம்பவத்தன்று லெட்சுமி வீட்டின் வழியாக வந்த மணிகண்டன், லெட்சுமி வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக பொருட்களை தூக்கி சாலையில் வீசியதாக கூறப்படுகிறது. இது பற்றி லெட்சுமி கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் மணிகண்டன், லெட்சுமியை தாக்கியுள்ளார். மேலும் அங்கு வந்த லெட்சுமியின் கணவர் ராஜேஷ்குமாரையும் தாக்கியதோடு, லெட்சுமியின் கூரை வீட்டிற்கு தீ வைப்பதற்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் லெட்சுமி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்