18 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

18 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

Update: 2022-03-21 20:46 GMT
அரியலூர்:
உலக தண்ணீர் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட கீழ்கண்ட 18 கிராம ஊராட்சிகளில் “அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி” என்று அறிவித்திட சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. அதன்படி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையக்குறிச்சி, இலையூர், காட்டாத்தூர், நாகப்பந்தல், ஓலையூர், ராங்கியம், ஸ்ரீராமன், வல்லம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பேட்டை, தேவாமங்கலம், பிராஞ்சேரி, வாணதிரையான்பட்டினம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையக்குடி, சன்னாசிநல்லூர், தளவாய், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்கண்ணி, நாயகனைப்பிரியாள், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஆகிய 18 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொடர்புடைய கிராம மக்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உரிய தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்