புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி
புலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் புத்தனாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர்களான சரவணன் (44), பாலமுருகன் (38) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 9 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.