தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களால் நோய் பரவும் அபாயம்

ராஜாமடம் வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-21 20:08 GMT
பட்டுக்கோட்டை:
ராஜாமடம் வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ராஜாமடம் வாய்க்கால் ஆற்றங்கரை சாலை
பட்டுக்கோட்டை நகரில் கல்லணைக்கால்வாய் கிளை வாய்க்காலான ராஜா மடம் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலின் வடபுறகரையில் வடசேரி ரோடு முதல் சுண்ணாம்புக்காரத்தெரு வரை சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்து இல்லாமல் போய் விட்டது. ராஜாமடம் வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் கண்டியன் தெருவிலிருந்து தாசில்தார் உதவி கலெக்டர் அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சென்று வருகின்றனர். 
நோய் பரவும் அபாயம் 
இந்த வாய்க்காலின் இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த ஆற்றின் வடகரையில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கோழிக்கழிவுகள், மீன் கழிவுகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் தாசில்தார் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம்  மற்றும் வேளாண்மை துறை அலுவலகங்களுக்கு செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் ராஜாமடம் வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களை அகற்றி, ேநாய் பரவுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்